பேனா:
இருண்ட
சரித்திரத்தை
வெளிச்சத்துக்கு கொண்டு
வரும்
ஆயுதம்!
இவனுக்கு தெரியாதது
எவருக்கும் தெரியாது!
கணினி:
இன்று
எனக் குதவ
நெடுநாளாய் தவமிருந்தவன்!
காகிதம்:
இவன் ஒரு
புரட்சியாளன்
பற்ற வைத்தால்
பற்றி கொள்வான்
சுயநலமில்லாமல்.
பற்றா நெஞ்சிலும்
ஓர் நாள்
புரட்சித் தீயாக
இவன் மேல் விழுந்த
எழுத்து வடிவில்.
இவன் முன்னோர்களில் பலர்
எங்களின்
நூல் நிலையத்தில்
அறிவு கண் திறக்கும்
ஆசானாக.
மொத்ததில்
பிதாவுக்கு அடுத்த நிலை.
ஆகவே
மரம் வளர்ப்போம்
நம் சுயநலத்திற்காக.
கருமேகம்:
தான் பருகிய
அனைத்தையும்
தூய்மைப்படுத்தி
தூவுவான்
இப்புவி வாழ.
இப்படிக்கு
பிரேம்குமார்




No comments:
Post a Comment