அன்று!
வந்தோரையும்,
வந்தேரிகளையும்
வாழ
வைத்தோம்.,
வாழ்வாங்கு
வாழ்ந்தோம்.
இன்று!
எம் நிலை
மறந்து
தனித்தனி
மரமானோம்
பேசாதே
குரலை
உயர்த்தாதே - என்ற
வார்த்தை
தான்
இந்நாஜிக்களின்
தாரக மந்திரமாய்
போனது.
ஆண்ட
இனம்
இன்று
கெளரவ
அடிமையாய்
அலைகிறது
அகிலமெங்கும்.
போதாதென்று...
இன்று!
நான்
வாழும்
நிலத்தை
அணுவிற்கு
சோதனை
களமாக்குகிறானே
எட்டப்ப
தமிழன்!
இறைவா!
நாங்கள்
அசிங்கமாய்
சாவதற்கு
முன்
நெஞ்சை
கிழித்துப் புதைத்த
எம்
முன்னோர்களின்
மானம்
கொடு,
நாங்கள்
வீர
மரணம் எய்த
களம்
அமைத்துக் கொடு.
இப்படிக்கு
பிரேம்குமார்



No comments:
Post a Comment