Sunday, 27 January 2013

மறுமணம்


இப்பிரபஞ்ச வெடிச் சிதரலின்
புவி யென்னும் சில்லின் மேல் - இறை
தன் அழகு மிகு கை வண்ணத்தால்
அடியேன் பிரம்மிக்கிற இந்நிலத்தில்
பால் ரெண்டு கூட்டங்களை
இனம் வாரியாக உலவ விட்டு
அவை கொஞ்சிவிளையாடும் அழகை
தான் தனியே ரசிப்பது
போதாதென்று,
யான் பெற்ற இன்பம் பெருக  
இவ்வையக மென
மனிதனையும் உலவ விட்ட
நாள் தொடங்கி
தீராத காதலோடு அவனை
தன்னோடு இணைத்து - கரைத்துக் கொள்ள
கனந்தோரும் அலைகின்றான்
மணக்கோல சந்நியாசியாக.
இதையெல்லாம் அறியாது மனிதன்
தனக்குள்ளே மட்டும் சட்டம் வகுத்து
கடிமணம் புரிகின்றான் காலந்தோறும்.
மேலும்....
தான் உருவான காரணம் அறியாமல்
இப்பாலை உருவாக்கிய பரந்தாமனை
கால வெள்ளத்தில் மறந்தே போனான்.
இனி….
கவனமுடன்.... மிக கவனமுடன்.....
கணந்தோறும்
மனையாள்-மன்னவன்
அன்புக்கு அன்பு புரியும் போது
மறுமணத்தை நினைந்து மகிழட்டும்
ஆம்! விண்ணக மறுமணத்தை
நினைந்து மகிழட்டும்.

இப்படிக்கு,

பிரேம்குமார்


தாய்



இறை இரக்கம் மெய்ப்பிக்க
மறு ஜென்மம் எனக் களித்து
“நான்” செய்வித்த கர்மம் கரைந்து
பரம்பொருளில் அடங்க வேண்டி
செய்த புண்ணியத்தாள்
எனக்காக உதித்தவளே
என் அன்னை!
மேலும்
ஈரைந்து மாதமாக என்னை
தன்னுள்ளே அடக்கி வைத்து
புடமிட்டு உருவாக்கியவள்
அவளன்றோ!

இப்படிக்கு
பிரேம்குமார்

ஹார்மோன்களின் அட்டகாசம்


“ஒருவரை
இச்சையோடு பார்க்கும் நோக்கில் அவனோடு / அவளோடு
விபச்சாரம் செய்தாயிற்று!”
                     – யேசு

காலம் கடந்து,
காமன் அரண்சூழ,
கற்போடு காத்திருந்து,
பட்டமரம் போல் காட்சியளித்து,
வேண்டாம் இந்த வாழ்கை! என 
சடா முடி தறித்து தப்பிவிடாமல்,
தைரியமாய் வாழ முற்படுவோரை
சபிக்கப்பட்டவர்கள் என்று பெயரெடுத்து,
சரீரத்தை அடக்க முயற்சித்தாலும்…….

ஹார்மோன்களின் அட்டகாசத்தால்
ஓயாமல்
கடவுளுக்கு முன்
நிற்க வெட்கப்படுகிறோம்.

இதற்குத்தான்
கடவுள் மனிதனாக
பிறக்க வேண்டும்
என்றானா கவி?

இப்படிக்கு,
பிரேம்குமார்